Wednesday, 3 July 2019

ராஜினாமா விளக்கம்: ராகுல் உருக்கம்

காங்., கட்சி தலைவர் பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.




அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கட்சியின் தலைவர் முறையில் 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். தோல்விக்கு நான் உட்பட பலர் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.



சுமூகமான தலைமை மாற்றத்திற்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். கட்சியின் புதிய தலைமையை தேர்வு செய்வதற்கான சரியான ஆள் நான் இல்லை. நான் ராஜினாமா செய்து விட்டதால், உடனடியாக புதிய தலைவரை தேர்வ செய்யும்படி கட்சியினரிடம் கூறி உள்ளேன். 
பா.ஜ., மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதே சமயம் பா.ஜ.,வின் கொள்கைகள் இந்தியாவை கட்டுப்படுத்த நினைப்பதை எனது உடலின் ஒவ்வொரு செல்லும் தடுக்கும். காங்., கட்சியின் கடைநிலை உண்மை தொண்டனாக எனது கடைசி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன்.




பிரதமரும், ஆர்எஸ்எஸ்.,ம் நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களையும் கைப்பற்ற நினைப்பதை எதிர்த்தே எங்களின் போராட்டம். தேர்தல் நேர்மையாக நடைபெறாமல் ஒரு குறிப்பிட்ட கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கிறது. 
லோக்சபா தேர்தலில் நாங்கள் ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை. ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனப்படும் சக்திகளை எதிர்த்தே போட்டியிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

Tuesday, 2 July 2019

ஐ.ஏ.எஸ்.,களுடன் மோடி கலந்துரையாடல்

PM,Narendra Modi,interaction,IAS,officers




புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். டில்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் அரசு அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்ட 2017ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின் அவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

முத்ரா கடனில் மோசடி: தமிழகத்தில் அதிகம்



பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில், வங்கிகளில் உள்ள 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக லோக்சபாவில் அவர், எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: பிரதமர் முத்ரா முத்ரா கடன் திட்டம் துவங்கப்பட்டது முதல் 2019 ஜூன் 21 வரை 19 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் இருந்து கிடைத்த தகவல்ப்படி, கடந்த 3 ஆண்டுகளில், 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. 
தவறு எப்படி நடந்தது. யார் பொறுப்பு என்பது விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து அதில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும். இதில் தொடர்புடைய 103 அதிகாரிகளில் 63 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக தமிழகத்தில் 344, சண்டிகரில் 275, ஆந்திராவில் 241 மோசடி நடந்துள்ளன. இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Supreme Court, SC, TN Govt, உள்ளாட்சி தேர்தல், சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு

புதுடில்லி: உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் உள்ளது ஏன் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என விளக்கமளித்தது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட், தேர்தல் நடத்துவது தொடர்பான இறுதிப்பணிகளை எப்போது செய்வீர்கள், எப்போது தேர்தலை நடத்துவீர்கள் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 

சூரியசக்தி மின் உற்பத்தி முதல் முறையாக உச்சம்

தமிழகத்தில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில், முதல் முறையாக, 2,200 மெகா வாட்டிற்கு மேல், மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. 
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 2,724 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் நிலவுகிறது. 
இதனால், முதலீட்டாளர்கள் பலரும், முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மின் வாரியம், குறித்த காலத்தில் பணம் தராதது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 1,500 - 1,800 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த கோடையில், எப்போதும் இல்லாத அளவுக்கு, வெயில் சுட்டெரித்து வந்தது. 
இதனால், சூரியசக்தி மின் நிலையங்களில், மே, 11ல், 2,172 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது; இதுவே, உச்ச அளவாக இருந்தது.இந்நிலையில், கடந்தமாதம், 29ம் தேதி, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, முதல் முறையாக, 2,202 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது

சட்டசபையில் இன்று..

சட்டசபையில் இன்று, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.அமைச்சர்கள், செங்கோட்டையன், அன்பழகன் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறைகளின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, இம்மாதம் 3வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். இதற்கான தேதி வெளியாகவில்லை.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை ஐஐடியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.




இது குறித்து சென்னை ஐஐடி நிர்வாகி ஒருவர் கூறுகையில், சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அழைப்பை, பிரதமர் மோடி ஏற்று கொண்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விழாவிற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்

Sunday, 30 June 2019

கேளம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் திமுகாவினர் பட்டாசு வெடித்து ரகளை

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சதன் நட்சத்திர தனியார் ஓட்டலில் நேற்று இரவு திமுக பிரமுகர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் அனுமதியின்றி  நடத்தி உள்ளனர் எல்லப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடிபோதையில் சதன் நிர்வாகத்திடம் தகராறு செய்து உள்ளனர் பிறகு அது கை கலப்பு ஆகி திமுகவினர் ஓட்டலின் ஜன்னல்கள் மற்றும் நேம் போடுகளை அடித்து நொறிக்கி சதன் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர் பின்னர்  பட்டாசு வெடித்து உள்ளே உள்ள சில பொருட்களை அடித்து நொறிக்கியுள்ளனர்  இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது