130 வது வட்டத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை மாவட்டம், தியாகராய நகர் மேற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் 130 வது வட்டத்தின் சார்பாக, தமிழர் திருநாள் பொங்கல் விழா 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை, அம்பிகா ஓட்டல் பின்புறம், 100 அடி சாலை, கன்னியப்பா தெருவில் 130வது வட்டத் தலைவர் மற்றும் அரசியல் பிரிவு மண்டல பொறுப்பாளர் வடபழனி எஸ்.துலுக்கானம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில், மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், மாவட்ட பொதுச்செயலாளர் டி.அரவிந்த்ராஜ், மாவட்ட செயலாளர் டி.உமாசங்கர், மண்டல தலைவர் ஆர்.வெங்கடேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் கோடம்பாக்கம் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் வடபழனி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் 130 வது வட்ட கிளைக் கழக செயலாளர் ரமேஷ் ராகவன் சிறப்பாக செய்திருந்தார்.
No comments:
Post a Comment